கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்து சீனாவிற்கு சென்ற MH370 விமானம் மாயமாய் மறைந்து போனது. இந்த சம்பவம் நடந்து 50 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் அமெரிக்க பைலட் ஒருவர் மலேசிய விமானம் விழுந்துள்ள இடத்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை FBI மற்றும் NTSB ஆகிய அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள Tonawanda என்ற நகரத்தை சேர்ந்த Michael Hoebel என்ற பைலட் கடந்த சில நாட்களாக இணையதளத்தில் விமானம் குறித்து முழு ஆய்வு செய்தார். தொடர்ந்து 60 மணிநேரம் இவர் இணையதளங்களில் ஆராய்ந்தபோது TomNod.com என்ற இணையதளத்தில் வெளிவந்த புகைப்படத்தில் இருப்பதுதான் மலேசிய விமானம் MH370 என்று அடித்து கூறுகிறார். இதற்கு அவர் பல ஆதாரங்களை குறிப்பிட்டு அந்த ஆதாரங்களுடன் FBI மற்றும் NTSB ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளார்.
மலேசிய விமானம் விழுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ள இடம் கோலாலம்பூருக்கு அருகிலேயே இருக்கின்றது என்பதுதான் ஆச்சரியமான தகவல். கோலாலம்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையில் உள்ள கடல்பகுதியில்தான் விமானம் உள்ளது என்று அவர் உறுதிபட கூறுகிறார்.
அமெரிக்க அரசும், மலேசிய அரசும் அவருடைய ஆதாரங்களை ஆய்வுசெய்த பின்னர் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு மீட்புப்படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளன.