இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இந்தியாவை அவமதித்ததாக அலகாபாத் நீதிமன்றத்தில் ஒபாமா மீது புகார் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சுதில்குமார் மிஸ்ரா என்ற வழக்கறிஞர் நேற்று தாக்கல் செய்த மனு ஒன்றில், அமெரிக்க அதிபர் ஒபாமாவு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது ‘இந்தியாவில் மத சகிப்பின்மை அதிகரித்து வருவதாகவும், சிறுபான்மை மதத்தவர்கள் அச்சமுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுளார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட நிலையில் இந்தியாவின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் ஒபாமா பேசியுள்ளது கண்டித்தக்கத்தக்கது.
எனவே ஒபாமாவுக்கு ‘சம்மன்’அவரை இந்தியாவுக்கு வரவழைத்து, இ.பி.கோ. 500வது பிரிவின் (அவதூறுக்கான தண்டனை) கீழ், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மீது வருகின்ற 18 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி நீலிமா சிங் கூறி உள்ளார்.