கனடா பிரதமருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் சந்திப்பு

கனடா பிரதமருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் சந்திப்பு

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து வரும் நிலையில் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு அவர்களை சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டு நல்லுறவுகளை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும், மெக்சிகோவை விட கனடா – அமெரிக்கா வர்த்தக உறவு குறித்து கவலை கொள்வதாகவும் டிரம்ப் கூறினார்.

முன்னதாக, அகதிகள் மற்றும் முஸ்லீம்கள் விவகாரத்தில் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அப்போது, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று கனடா அழைப்பு விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply