புதிய குடியேற்றக் கொள்கை. ஈரானிற்கு திடீர் விலக்கு கொடுத்த டிரம்ப்
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், பல புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அதில் முக்கியமான ஒன்று புதிய குடியேற்ற கொள்கை
புதிய குடியேற்ற கொள்கை மூலம் ஈரானிற்கு மட்டும் விலக்கு அளிக்கும் மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகள் அமெரிக்கா வருவதற்கு டிரம்ப் தடை விதித்தார். இந்த தடை 7 இஸ்லாமிய நாடுகளின் பொதுமக்களை அதிருப்தி அடைய செய்தது.
இதனிடையே தற்போது ஈரான் நாட்டுக்கு விலக்கு அளித்து, புதிய குடியேற்றக் கொள்கை மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 7 இஸ்லாம் நாடுகளில் ஈரானுக்கு மட்டும் அவர் தடையை விலக்கிய நடவடிக்கை அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.