ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட பிரபல அமெரிக்க தலைவர் மரணம்

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட பிரபல அமெரிக்க தலைவர் மரணம்

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அவர்களின் கட்சியான குடியரசு கட்சியின் மூத்த தலைவர் ஜான் மெக்கைன் காலமானார். அவருக்கு வயது 81. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் மெக்கைன் அவர்களது மறைவு குறித்து அவரது மனைவி கூறியதாவது: என் இதயம் நொறுங்கிவிட்டது. கடந்த 38 ஆண்டுகளாக ஒரு துணிச்சலான, அன்பான மனிதருடன் வாழ்ந்து இருக்கிறேன் என்பதால் நான் அதிர்ஷ்டசாலி. அவர் விரும்பிய வாழ்க்கையை, நேசித்த மனிதர்களை, இடங்களை, கொள்கைகளை கடந்து சென்று இருக்கிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.

ஜான் மெக்கைன் உடல், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரிலும், பின்னர் வாஷிங்டன் நகரிலும் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னாபோலிசில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.

ஜான் மெக்கைன் மறைவுக்கு டிரம்ப், ஒபாமா உள்பட பல்வேறு தலைவர்களும் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்

Leave a Reply