அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ தடை இல்லை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதன்முதலாக மாசாச்சூசெட்ஸ் என்ற மாகாணத்தில் மட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. இந்த மாகாணத்தை அடுத்து படிப்படியாக ஒவ்வொரு மாகாணத்திலும் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி கிடைத்தது. இதுவரை மொத்தம் 36 மாகாணங்களில் அனுமதி கிடைத்திருந்த நிலையில் எஞ்சிய 14 மாகாணங்களில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து ஓரினச் சேர்க்கை பிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற அமெரிக்க அரசியலமைப்பு சட்ட கோட்பாட்டை அமெரிக்கா, இந்த தடையை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இந்த இந்த வழக்கை விசாரித்துவந்த அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டு நாடு முழுவதும் வாழ எவ்வித தடையும் இல்லை என உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.