தற்காலிகமாக ஹெச்1-பி விசா வழங்கப்படுவது நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

தற்காலிகமாக ஹெச்1-பி விசா வழங்கப்படுவது நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க அரசு ஹெச்1-பி விசா வழங்குவதை ஏப்ரல் 3 முதல் 6 மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஹெச்1- பி விசா நிறுத்தம் என்ற அதிரடி நடவடிக்கையால் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் பதியாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கர்களின் வேலையை வெளிநாட்டில் இருந்து குறிப்பாக இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்கள் தட்டிப்பறிப்பதாக கடந்த சில நாட்களாக அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு ஊழியர்களுக்கு வேலை தடையின்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply