அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் இதுவரை பயன்படுத்தி வந்த ஸ்வஸ்திக் சின்னம் தடை செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த சின்னம் தங்களை மனதை புண்படுத்துவதாக அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் யூத மாணவர்கள் புகார் கூறியதை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இந்த சின்னத்தை தடை செய்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லரின் சின்னமாக இது விளங்கியது என்றும், தங்கள் முன்னோர்கள் பலியாக காரணமாக இருந்த ஹிட்லர் பயன்படுத்திய இதே சின்னத்தை பல்கலைக்கழகம் பயன்படுத்துவது தங்களுக்கு மன உறுத்துதலை ஏற்படுத்துவதாக யூத மானவர்கள் கொடுத்த புகாரை அடுத்து, மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழகம் இந்த சின்னத்தை தடை செய்வதாக நேற்று அறிவிப்பு பலகையில் வெளியிட்டுள்ளது. இதனால் யூத மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போன்று இந்தியாவில் இந்து மதம் மற்றும் புத்த மதத்தில் ஸ்வஸ்திக் சின்னம் முக்கியத்துவம் வாய்ந்தத ஒன்றாக கருதப்படுகிறது.