மூன்றாம் உலகப்போர் மூளுமா? சீனாவுக்கு எதிராக டிரம்ப் அதிரடி

மூன்றாம் உலகப்போர் மூளுமா? சீனாவுக்கு எதிராக டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விரைவில் சீனா மீது அவர் போர் தொடுப்பார் என்று கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் டிரம்ப்பின் முதன்மை ஆலோசகரான ஸ்டீவ் பெனான் என்பவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “சீனா மீது அமெரிக்கா விரைவில் போர் தொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுத்தால் சீனாவுக்கு அதன் நட்பு நாடுகளான ரஷ்யா, பாகிஸ்தான் ஆதரவு கொடுக்கும். அதேபோல் பசிபிக் பெருங்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி சீனாவுக்கு ஜப்பானும் எதிரியாகி வருகிறது. அருணாச்சல பிரதேச விவகாரத்தால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அமெரிக்கா-சீனா போர் ஏற்பட்டால் ஜப்பானும், இந்தியாவும் அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு உலகப்போர் வந்தால் அதில் அணு ஆயுதம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், உலகம் அழிவில் இருந்து தப்ப முடியாது. இதை கணக்கில் கொண்டு அமெரிக்காவையும், சீனாவையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் நடுநிலை நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply