ஒரு முறை ‘உச்சா’ போனால் ஒரு ரூபாய் வருமானம். அகமதாபாத் நகராட்சியின் புதிய திட்டம்

toiletsஅரசு மற்றும் தனியார்கள் நடத்தி வரும் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்த இதுவரை பணம் கொடுப்பதைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இனிமேல் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தினால் பணம் கிடைக்கும். ஆம் ஒருமுறை பொது கழிப்பறையை பயன்படுத்தினால் ரூ.1 நமக்கு கிடைக்கும் புதிய திட்டம் ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொதுமக்களுக்காக பல்வேறு இடங்களில் பொதுக்கழிப்பறைகளை கட்டி வைத்திருந்த போதிலும், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே பலர் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையை முற்றிலும் தடுத்து, அனைவரும் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த திட்டத்தை அகமதாபாத் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டம் குறித்து நிலைக்குழு தலைவர் பிரவிண் படேல் கூறும்போது, ”அகமதாபாத்தை சுத்தமான, சுகாதாரமான நகரமாக மாற்றுவதற்கு ஏதுவாக இந்த புதுமையான திட்டத்தை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது.

அகமதாபாத் நகரில் 315 பொது கழிவறைகள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி, 120 இடங்கள் திறந்தவெளி பொது கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுவது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த வழக்கத்தை ஒழிப்பதுதான், நாங்கள் அறிமுகம் செய்கிற இந்த கட்டணம் தரும் கழிவறை வசதி திட்டம்” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் இது அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply