பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் சுஷ்மா ஸ்வராஜ்?
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமைகள் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளது.
பாஜக சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் மட்டுமின்றி மேலும் ஐந்து நபர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும் சுஷ்மாவின் பெயர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த பொதுவேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பெயரை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.