ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இணையாக இரண்டு விருதுகளை பெற்ற ஜிப்ரான்
இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்த ‘உத்தமவில்லன்’ திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெறாமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்தாலும், சர்வதேச அளவில் விருதுகளை வென்று ஆறுதல் அடைந்துள்ளது.
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் உத்தமவில்லன்’ திரைப்படம் ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம் விருது, சிறந்த நடிகர் விருது, சிறந்த இசையமைபாளர் விருது, சிறந்த சவுண்ட் எஞ்சினியர் விருது, சிறந்த பாடல் விருது என ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. கமல்ஹாசன், ஜிப்ரான், குணால்ராஜான் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றுள்ளனர்.
மேலும் இதுமட்டுமின்றி ரஷ்யாவில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவிலும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. ஒரே நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றதைபோல ஒரேநேரத்தில் இரண்டு சர்வதேச விருதுகளை ஜிப்ரான் பெற்று சாதனை செய்துள்ளார். விருதுபெற்ற கமல்ஹாசன், ஜிப்ரான், குணால்ராஜான் ஆகியோர்களுக்கு சென்னை டுடே நியூஸ் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
[carousel ids=”62038,57949,55191,51634,30785,33845,23221,26344″]
English Summary: Uthama Villain get five awards at Los Angels international film festival