உ.பி. கவர்னர் திடீர் ராஜினாமா. கேரள கவர்னர் ராஜினாமா செய்ய மறுப்பு.

governorsகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் முதன்முதலாக உத்தரபிரதேச ஆளுனர் ஜோஷி ராஜினாமா செய்து பிள்ளையார் சூழி போட்டுள்ளார். இவரை அடுத்து இன்னும் பல ஆளுனர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு முக்கிய காரணங்கள் இல்லாமல் ஆளுனர்களை பதவியில் இருந்து நீக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதால், புதிதாக பதவியேற்ற மோடி அரசு, ஒருசில ஆளுனர்களை பதவி விலகும்படி மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறது.

இதன் முதல்கட்டமாக உத்தரபிரதேச ஆளுனர் ஜோஷி பதவி விலகியுள்ளார். இன்னும் கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநில ஆளுனர்களையாவது நீக்கவேண்டும் என மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

பஞ்சாபில் சிவராஜ் பாட்டீலும், மத்திய பிரதேசத்தில் ராம் நரேஷ் யாதவும், மேற்கு வங்காளத்தில் எம்.கே. நாராயணனும் தற்போது ஆளுனர்களாக உள்ளனர். இவர்கள் மூவரும் எந்நேரமும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். ஆனால் கேரள ஆளுனர் ஷீலா தீட்சித் ஆளுனர் பதவியில் இருந்து விலக முடியாது என்று கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply