பட்டமளிப்பு விழாவில் அங்கியை அணிய மறுத்த உத்தரகாண்ட் முதல்வர்
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டபோது பல்கலைக்கழகம் கொடுத்த அங்கியை அணிய மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பெட்ரோலிய மற்றும் எரிசக்தி படிப்புகளுக்கான பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், கவர்னர் கே.கே.பால், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின்போது கவர்னர் உள்பட அனைவரும் பல்கலைக்கழகம் கொடுத்த அங்கியை மறுக்காமல் அணிந்த நிலையில் முதல்வர் ராவத் மட்டும் பட்டமளிப்பு விழா அங்கியை அணிய மறுப்பு தெரிவித்தார். இதனால் விழாவில் பங்கேற்ற மற்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் விழாவின் போது பேசிய ராவத் கூறுகையில், ராமருக்கு ஹனுமன் பணியாற்றிய போது, இளைய தலைமுறையினர் அர்ப்பணிப்புடன் தனது நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அங்கி என்பது காலனி ஆதிக்கத்தின் எச்சம். ஒரு நாடு தனது முன்னோர்கள், அவர்கள் அளித்த ஞானம், கலாச்சாரம் குறித்தே பெருமிதம் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.