மதுபான விநியோகிஸ்தர்களிடம் முதல்வர் பேரம். அதிர்ச்சி வீடியோ வெளியீடு

மதுபான விநியோகிஸ்தர்களிடம் முதல்வர் பேரம். அதிர்ச்சி வீடியோ வெளியீடு

utterghandஉத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹரீஷ் ராவத் மதுபான விநியோகஸ்தர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் பேரம் பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவை உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு முக்கிய பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் அம்மாநிலத்தின் மதுக்கொள்கையில் மாற்றம் செய்து அதன் மூலம் பெரும் பணம் சம்பாதிப்பதில் முதல்வர் ஹரீஷ் ராவத் கவனம் செலுத்தியதாகவும், மாநிலத்தின் மதுக்கொள்கையை மாற்றியமைக்க தனியார் மது விநியோகஸ்தர்களிடம் முதல்வரின் விசுவாசத்துக்குரிய உதவியாளர் லஞ்சம் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும்  வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் அளிக்கப்பட்ட பங்கு எவ்வளவு என்பதை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர்  ஹரீஷ் ராவத் விளக்கம் அளித்தபோது, “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அதில் உண்மையில்லை. பாஜகவின் முக்கிய தலைவர்கள் மீதுள்ள ஊழல் புகார்களின் மீதான கவனத்தை திசை திருப்ப அக்கட்சி இதுபோன்று செயல்பட்டுள்ளது. இருப்பினும் எனது தனிச் செயலாளர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வீடியோவின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் ஒலி, ஒளி தெளிவாக இல்லை. அதில் இருப்பது முகமது ஷாகித் என்பது உறுதி செய்யப்படவில்லை. அது அவர்தான் என உறுதி செய்யப்பட்டாலும், அவருக்கு இதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஹரீஷ் ராவத் தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=npmSgeLHuTs

Leave a Reply