இலங்கை அதிபர் ராஜபக்சே அமைத்துள்ள புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மலையக மக்கள் கட்சியின் மூத்தத் தலைவரும், தமிழருமான ராதாகிருஷ்ணன் இந்த பதவியை பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மலைவாழ் தமிழர் மற்றும் முஸ்லீம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ராதாகிருஷ்ணன், கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பதுளை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கையின் மிகப்பெரிய கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில் துணை அமைச்சராக நியமினம் செய்யப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனுக்கு, தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்றாவது முறையாக ராஜபக்சே மீண்டும் களமிறங்க உள்ளார். தற்போது அவரது செல்வாக்கு சரிந்து வருவதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இலங்கை தமிழர்கள் மத்தியில் ஆதரவை பெருக்கும் வகையிலும், மீண்டும் அதிபர் பதவியை பிடிக்கும் நோக்கிலும் தமிழருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.