பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்

ragavanபழம்பெரும் குணச்சித்திர நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.

சென்னை தி.நகரில் தனது குடும்பத்தினர்களுடன் வசித்து வந்த ராகவன், கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிப்பு காரணமாக  தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை 6 மணியளவில் அவர் காலமானார்.

ராகவனின் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு  இன்று நடைபெறும் என கூறப்படுகிறது.

காஞ்சிபுரத்தை அடுத்த வெம்பாக்கம் என்ற கிராமத்தில் கடந்த 1925ச்ச்ம் ஆண்டு பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்பத்தில் ஒரு நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய ராகவன், பின்னர் நாடக நடிகராகி அதன்பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார்.

1954 ஆம் ஆண்டு ‘வைரமாலை’ என்ற படத்தின் மூலம் தனது கலை உலக வாழ்க்கையை தொடங்கிய ராகவன், எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் என தற்போதைய இளம் நடிகர்களான விமல், விஜய் சேதுபதி வரை பல்வேறு நடிகர்களுடன் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply