வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

vaikasi_visakam185

வடபழனி: வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக பெருந்திருவிழா துவங்கி, நடைபெற்று வருகிறது. வடபழனி, ஆண்டவர் கோவிலில், கடந்த, 22ம் தேதி, வைகாசி விசாக பெருந்திருவிழா துவங்கியது. அதில், பூத வாகனம் மற்றும் ஆட்டுக்கிடா வாகன புறப்பாடு, நேற்று நடந்தது. இன்று, காலை புறப்பாடாக, காமதேனு வாகனமும், இரவு புறப்பாடாக, நாக வாகனமும் நடைபெறும். நாளை, காலை புறப்பாடாக, புருஷாமிருக வாகனமும், இரவு புறப்பாடாக, ஐந் திருமேனிகள் உலா, பெரிய ரிஷப வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடுகள் நடைபெறும். வரும், ௨௯ம் தேதி, காலை ௭:௦௦ மணிக்கு மேல் தேர் வடம்பிடித்தல், தேரோட்டம் ஆகியவை நடக்க உள்ளன. அடுத்த மாதம் 1ம் தேதி, காலை, ஆறுமுக பெருமான் பல்லக்கில் வீதியுலா, தீர்த்தவாரி கலசாபிஷேகம், இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம், பெரிய மயில் வாகனம் நடைபெறும். ஜூன் 2ம் தேதி, இரவு புறப்பாடாக, சிறப்பு புஷ்ப பல்லக்குடன் நிகழ்ச்சிகள் நிறைவடையும்.

Leave a Reply