நான் எப்பவுமே டாப்புதான். வடிவேலுவின் ‘கத்திச்சண்டை’ பேச்சு

நான் எப்பவுமே டாப்புதான். வடிவேலுவின் ‘கத்திச்சண்டை’ பேச்சு

kathisandaiவடிவேலு எப்பொழுதாவதுதான் சினிமா விழாக்களில் கலந்து கொள்வார். ஆனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவரது படத்தை விட நகைச்சுவை தூக்கலாக இருக்கும்.

நேற்று நடைபெற்ற ‘கத்திச்சண்டை’ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு எனக்கு ஆப்பும் கிடையாது கேப்பும் கிடையாது, நான் எப்பவுமே டாப்புதான்’ என்று தனது பாணியில் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப பேர் சொன்னாங்க, ரொம்ப பேர் கேப்விட்டு, இப்ப வந்து இருக்கீங்க. நீண்ட இடைவேளைக்கும் பிறகு இந்தப் படம் நடிக்கறீங்கன்னு சொன்னாங்க. சத்தியமா, எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு கேப்பும் கிடையாது. ஆப்பும் கிடையாது. எப்பவுமே இந்த வடிவேலு டாப்பு தான். வாட்சாப்,அரசியல்,பேப்பர்னு எல்லாத்துலையும் நான் பயன்படுத்தின வசனம் தான் வருது. 24 மணி நேரமும் சினிமாப் பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருப்பேன். கத்திச் சண்டை படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கத்திச் சண்டை படத்துல கத்தி சண்டையும் கிடையாது, கத்திப் பேசுற சண்டையும் கிடையாது, இது ஒரு புத்திச் சண்டை.. படத்துல எனக்கு சைக்கியார்ட்டிக் டாக்டர் கதாப்பாத்திரம்னு இயக்குனர் சுராஜ் சொன்னார். “டுபாக்கூர் டாக்டரான்னு” கேட்டேன். இல்ல, உண்மையான டாக்டர் தான்,ஆனா டுபாக்கூர்னு சொன்னார்.கதைய ஃபோன்லயே ஐந்து நிமிடம் சொன்னார்.விஷாலிடமும் பேசினேன். வாய்ப்பு இல்லாமல் எல்லாம் நான் படங்களில் நடிக்காம இல்லை. நிறைய கதை கேட்பேன்.எதுவும் பிடிக்கல. கத்திசண்டை படம் ஒரு அற்புதமான ஸ்கிரீன் பிளே. நான் விஷால் கூட நடிச்ச முதல் படமான திமிரு சூப்பர் ஹிட். இரண்டாவது படமான ‘நடிகர் சங்க கட்டிடத்த காணோமும்’ சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதே மாதிரி, இந்தப் படமும், பெரிய ஹிட் அடிக்கும்.

நான் எப்பவுமே மனுஷங்ககிட்ட இருந்துதான் காமெடி காட்சிகளுக்கு விஷயம் எடுப்பேன். ஒரு நாள் இப்படித்தான் ரோட்டுல ஒருத்தர் மயங்கிக் கிடந்தார். பாவமேன்னு போய் எழுப்பினா, நான் போதைல படுத்து இருந்தேன்னு அடிக்க வந்துட்டார்.இதத்தான் படத்துலயும் காட்சியா வச்சோம்.

கொஞ்ச நாள் முன்னாடி என்னோட பாட்டி இறந்து போயிட்டாங்க. அவங்கள பார்க்க, சில மாசம் முன்னாடி ஊருக்கு போயிருந்தேன். எதுலப்பா வந்தேன்னு பாட்டி கேட்டாங்க. பிளைட்ல 4000 ரூபாய் கொடுத்து அரை மணி நேரத்துல வந்தேன்னு சொன்னதும், திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ரயில்ல 150 ரூபாய்க்கு , ராத்திரி பூரா கூட்டிட்டு வருவானே, இவனுக அரை மணி நேரத்துல கூட்டிட்டு வந்து உன்னைய ஏமாத்தீட்டாங்களேடான்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதுலயும் ஒரு லாஜிக் இருக்கத்தான் செய்யுது”

Leave a Reply