ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம். டெல்லியில் வைகோ கைது. கூட்டணியில் இருந்து விலகுவாரா?

vaiko protest delhi  இந்திய பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிக்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று காலை  புதுடில்லி வந்தடைந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வைகோ கருப்புக்கொடியை கையில் ஏந்தி ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரது கட்சி தொண்டர்களும் அவருடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

vaiko protest delhi 1டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய வைகோ ,”இன்று மகிழ்ச்சியும், பெரும் துக்கமும் நிறைந்த ஒரு முக்கியமான நாள். நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமராகும் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டிருப்பதை ம.தி.மு.க சார்பிலும் மற்றும் ஈழத் தமிழர்களின் சார்பிலும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

vaiko protest delhi 2இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு இனத்தையே கூண்டோடு அழித்த மகாபாவி. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை, குழந்தைகளை ஈவு இரக்கமின்றி தனது படைகள் மூலம் கொன்று குவித்த இனப்படுகொலையாளி. அத்தகையை கொடூரமான ராஜபக்சேவை இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது தமிழர்களின் மனதை வேதனைப்படுத்தியுள்ளது.

பின்னர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட வைகோவும் அவரது கட்சி தொண்டர்களும் சென்றபோது டெல்லி காவல்துறையினர் வைகோவையும் அவரது கட்சி தொண்டர்களையும் கைது செய்தனர்.

Leave a Reply