தஞ்சையில் முற்றுகை போராட்டம். வைகோ கைது.

vaikoகாவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி நடத்திய போராட்டம் காரணமாக நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

காவிரிக்குக் குறுக்கே கர்நாடக அரசு கட்ட அணை கட்ட விடாமல் தடுப்பது, மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை முற்றிலும் கைவிட மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய கோரிக்கைகளுக்காக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதைத் தடுத்து, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறவழியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தலைமையில் தஞ்சை கலால் வரி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி, பேரழிவு எதிர்ப்பு இயக்கம், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், கலந்துகொண்டன.

அப்போது தஞ்சை மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply