இலங்கை அதிபர் ராஜபக்சே, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டதை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நரேந்திர மோடியின் அமைச்சரவை பதவி ஏற்கும் விழாவிற்கு, இலங்கை அதிபர் மகாபாவி ராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், வந்திருக்கும் தகவல் தமிழர்கள் மட்டுமின்றி இந்திய நாட்டிற்கே அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக உள்ளது.
லட்சக்கணக்கான தமிழர்களின் ஈரு இரக்கமின்றி கொலை செய்த ராஜபக்சேஐ இந்திய நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதை எப்படி தமிழர்களால் சகித்துக் கொள்ளமுடியும்?
இதற்கு முன்னர்1998 ஆம் ஆண்டுகளில் அடல்பிஹாரி வாஜ்பாய் பதவியேற்றபோது இலங்கை அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, பாரதிய ஜனதா கட்சிக்கு நினைவூட்ட விரும்புகிறேஎன்.
எங்கள் எச்சரிக்கையையும் மீறி ராஜபக்சே பதவியேற்பு விழாவுக்கு அனுமதிக்கப்பட்டால், தமிழ் இன மக்கள் மோடி அரசை மன்னிக்க மாட்டார்கள்.
எங்களுடைய கோரிக்கையை ஏற்று நரேந்திரமோடி நல்லதொரு முடிவை எடுப்பார் என நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.