ஜனாதிபதி பேச்சுக்கு வைகோ கண்டனம். இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு.

 vaiko and presidentடெல்லியில் நடந்த இந்தி மொழி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ”சாதாரண மக்கள் பலனடையும் வகையில், அரசு நிர்வாகத்திலுள்ள்ள இந்தி மொழி வார்த்தைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் நாட்டின் அலுவல் மொழியான இந்தியை நாடு முழுவதும் பரப்புவதில், அனைவரும் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

ஜனாதிபதியின் இந்த பேச்சுக்கு தமிழகத்தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியை திணிக்க முயற்சி செய்தால் மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “நரேந்திர மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்த பிறகு இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்துவதுபோல, மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் இந்தி மொழியில் பதிவுகள் இட வேண்டும் என்ற உத்தரவு, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு, சமசுகிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஆகியவை மொழிப் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆட்சிமொழி அலுவல்துறை எல்லா வகையிலும் இந்தி மொழியைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், பட்டப் படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும் என்றும், சட்டம் மற்றும் வணிகவியல் பாடங்கள் இந்தி வழியில் நடத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் ஆட்சிமொழி அலுவல் துறை சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

மத்திய அரசு அதிகாரத் துணைகொண்டு, இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி, அலுவல் மொழி என்று இந்தியைத் திணிக்க முற்பட்டால், விபரீத விளைவுகள்தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும். எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”

Leave a Reply