தேமுதிக, தமாக உடைவதற்கு யார் காரணம்? மு.க.ஸ்டாலின் கூறும் பகீர் காரணம்

தேமுதிக, தமாக உடைவதற்கு யார் காரணம்? மு.க.ஸ்டாலின் கூறும் பகீர் காரணம்

stalinமக்கள் நலக்கூட்டணியில் இணைந்தததால் தேமுதிக மற்றும் தமாக உடைந்தது. தேமுதிக கட்சியின் அதிருப்தியாளர்கள் ‘மக்கள் தேமுதிக’ என்ற புதிய கட்சியையும், தமாக அதிருப்தியாளர்கள் மீண்டும் காங்கிரஸ் உடனும் இணைய முடிவு செய்துள்ளனர். இந்த இரு கட்சிகளின் அதிருப்தியாளர்கள் பெருமளவு வெளியேறியுள்ளதால் இரு கட்சிகளும் பலவீனம் அடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த கட்சிகள் உடைய யார் காரணம் என்பது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததால் தே.மு.தி.க. நிர்வாகிகள் வெளியேறி தனிக்கட்சியை தொடங்கியதை தொடர்ந்து த.மா.க.வில் இருந்தும் நிர்வாகிகள் வெளியேறுவதை நீங்கள் அங்கு போய்தான் கேட்க வேண்டும்.

ஏற்கனவே தே.மு.தி.க. அங்கு சென்று இணைந்ததும் உடைய ஆரம்பித்தது, இப்போது த.மா.கா. இணைந்ததும் அந்த கட்சியும் உடைய ஆரம்பித்துள்ளது. இதெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வைகோ கருணாநிதியும், ஸ்டாலினும் திட்டமிட்டு, ஏதோ பல கோடி ரூபாய் கொடுத்து அந்த கட்சியை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.

ஆக, த.மா.கா.வாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும் அவற்றை உடைப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் நான் வெளிப்படையாக சொல்கிறேன், வைகோ தான் காரணம். இந்த கட்சிகளை எல்லாம் அங்கு கொண்டு சென்று சேர்க்காமல் இருந்தால், அவை உடைந்திருக்காது. எனவே அவர்தான் அவற்றை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு” என்று கூறியுள்ளார்.

Leave a Reply