என்ன பேசினேன் என்பதை சொல்ல முடியாது. கவர்னரை சந்தித்த பின்னர் வைகோ பேட்டி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை இந்த வருடம் நடத்த அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சற்று முன் வைகோ சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஜல்லிக்கட்டு மற்றும் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து வைகோ, கவர்னரிடம் பேசியிருப்பதாக கூறபடுகிறது. மேலும் கவர்னரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது:
ஆளுநர் வித்யாசாகர் ராவ் எனது நண்பர். கடந்த முறையும் நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். இந்த முறையும் நட்பு ரீதியாக சந்தித்தேன்.
தமிழகத்தின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். அவற்றை சொல்ல முடியாது. குறிப்பாக, கலாசாரத்தோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டு பற்றி விளக்கம் தெரிவித்தேன். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரிடம் வலியுறுத்துமாறு கூறினேன். டிசம்பர் 10ஆம் தேதி பிரதமரை சந்திக்கும்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசுவதாக கவர்னர் தெரிவித்தார்.
குழந்தைகள் போல் காளைகளை தமிழர்கள் வளர்த்து வருவதை எடுத்துக்கூறினேன். விபத்து ஏற்படும் என்பதற்காக சாலையில் கார்களை ஓட்டாமல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்