விஜயகாந்துடன் வைகோ திடீர் சந்திப்பு. மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக?

விஜயகாந்துடன் வைகோ திடீர் சந்திப்பு. மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக?
vijayakanth
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது. அதிமுக தனித்து அல்லது பாஜகவுடன் மட்டும் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியை தொடங்கிவிட்டன.

குறிப்பாக விஜயகாந்தின் தேமுதிகவை வளைத்து போட பாரதிய ஜனதா, திமுக மற்றும் வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி ஆகியவை போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து தங்கள் கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
 

சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, விஜயகாந்தை மக்கள் நல கூட்டணியில் இணைய வலியுறுத்தியதாகவும், விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்

Leave a Reply