மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. தோல்வி அடைந்த தொகுதியில் வைகோ
மக்கள் நலக்கூட்டணியில் மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ளார். கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவர் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தினால் தயார் என்று அறிவித்திருந்த தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி, பல்லாவரம் தொகுதியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இனி மதிமுகவின் வேட்பாளர் பட்டியலை பார்ப்போம்,.
1) வைகோ – கோவில்பட்டி
2) திருப்போரூர் – மல்லை சத்யா
3) காரைக்குடி – செவந்தியப்பன்
4) ஆலங்குடி – மருத்துவர் சந்திரசேகரன்
5) செஞ்சி – ஏ.கே.மணி
6) மதுரை தெற்கு – பூமிநாதன்
7) ஆற்காடு – உதயகுமார்
8) உசிலம்பட்டி – பாஸ்கர சேதுபதி
9) சாத்தூர் – ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்
10) ஜெயங்கொண்டம் – கந்தசாமி
11) அரவக்குறிச்சி – கலையரசன்
12) முதுகுளத்தூர் – ராஜ்குமார்
13) தாராபுரம் – வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள் கட்சி)
14) பல்லாவரம் – வீரலட்சுமி (தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர்)
15) பல்லடம்- முத்துரத்தினம்
16) ஆயிரம் விளக்கு- ரெட்சன் அம்பிகாபதி
17) கிணத்துக்கடவு – ஈஸ்வரன்
18) சங்கரன்கோவில்- சதன்திருமலைக்குமார்
19) சிங்காநல்லூர் – அர்ஜுன்ராஜ்
20) ஆவடி – அந்திரிதாஸ்
21) துறைமுகம் – முராத் புகாரி
22) பூந்தமல்லி (தனி) – கந்தன்
23) ஈரோடு மேற்கு – முருகன்
24) குளச்சல் – சம்பத் சந்திரா
25) திருச்சி கிழக்கு – டாக்டர் ரொஹையா
26) அண்ணாநகர் – மல்லிகா
27) தூத்துக்குடி – பாத்திமா பாபு
28) நாகர்கோவில் – ராணி செல்வின்
29) பாளையங்கோட்டை – நிஜாம்