தமிழகத்தில் முதன்முதலாக பொற்கால ஆட்சியை கொடுத்த பெருந்தலைவர் காமராஜரை ராசியில்லாதவர் என்று கூறிய வைகோ மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு விருதுநகர் மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று விருதுநகர் தொகுதியில் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “பொதுவாக தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருதுநகரில் உள்ள காமராஜர் வீட்டுக்குச் சென்று அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தால் தோற்றுப் போய் விடுவோம் என்று அஞ்சுகிறார்கள். ஏனெனில் காமராஜர் வீட்டுக்கு சென்றால் ராசியில்லாமல் போய் விடும் என்று போவதே இல்லை. பெருந்தலைவரை புறக்கணிக்கும் தலைவர்களின் மத்தியில் தன்மானத் தலைவராக திகழும் வைகோ, காமராஜர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். காமராஜர் ராசி இல்லாதவர் என்று பலரும் பேசி வருவதை தனது வெற்றி மூலம் முறியடிக்கப் போகிறார்.” என்று பேசினார்.
இவரை அடுத்து பேசிய வைகோவும் காமராஜர் ராசியில்லாதவர் என்று அனைவரும் கூறுகின்றனர். அதை என்னுடைய வெற்றியின் மூலம் பொய்யாக்குங்கள் என்று பேசியுள்ளார். காமராஜர் பெயரை சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று எண்ணி இவர்கள் பேசிய பேச்சு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. காமராஜரை ராசியில்லாத தலைவர் என்று எப்படி சொல்லலாம் என்று விருதுநகர் முழுவதும் பரபரப்பு அடைந்துள்ளது.
மேலும் போலி அரசியல்வாதிகளை கண்டால் காமராஜரின் ஆவி சும்மா விடாது. அதற்கு பயந்துதான் பல அரசியல்வாதிகள் காமராஜர் வீட்டுக்கு செல்வதில்லை. காமராஜர் இழிவாக பேசிவிட்டு இங்கு ஓட்டுவாங்கலாம் என்று எண்ணுபவர்கள் ஏமாந்துபோவார்கள் என்று விருதுநகர மக்கள் பேசி வருகின்றனர்.