ஸ்டெர்லைட்டை அடுத்து முல்லை பெரியாறை கையில் எடுத்த வைகோ

ஸ்டெர்லைட்டை அடுத்து முல்லை பெரியாறை கையில் எடுத்த வைகோ

ஸ்டெர்லைட் பிரச்சனை கிட்டத்தட்ட முடிந்து தமிழகம் அமைதியாக இருக்கும் நிலையில் தற்போது முல்லை பெரியாறு பிரச்சனையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையில் எடுத்துள்ளார்.

தமிழகம் போராட்டங்கள் இன்றி அமைதியாக இருந்தால் ஒருசில கட்சிகளுக்கு பிடிக்காது. இலங்கை பிரச்சனை, காவிரி, ஸ்டெர்லைட்டை அடுத்து தற்போது கிடப்பில் உள்ள முல்லை பெரியாறு பிரச்சனையை வைகோ மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

அவர் இந்த பிரச்சனை குறித்து கூறியதாவது: முல்லைப் பெரியாறு பிரச்னையை அரசியல் சட்ட அமர்வுக்கு தமிழக அரசு எடுத்துச் செல்ல வேண்டும். அணைக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு, உச்சநீதிமன்றம் மேற்கொள்ளவிடாமல் நடவடிக்கை தேவை . முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசுக்கு சாதகமான நிலை உருவாக இடம் தரக்கூடாது என்று கூறியுள்ளார். அனேகமாக விரைவில் இதுகுறித்து போராட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply