வைகோ கோரிக்கை நிராகரிப்பு. ராஜபக்சேவை அழைத்தது தவறில்லை. பாஜக விளக்கம்.

23TH_VAIKO_1729604fநரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவை அழைக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். கூட்டணி கட்சி தலைவரான வைகோவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அனைவரும் நினைத்திருந்த வேளையில், வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததில் எவ்வித தவறும் இல்லை என்றும் இன்று பாஜகவின் தமிழக எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அளித்துள்ள ஒரு அறிக்கையில் “நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை. இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் ஆனால், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்று கூறியுள்ளார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள வைகோ, பதவியேற்பு விழாவை புறக்கணிப்பார் என்றும், கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply