உணவு கூட கொடுக்கவிடல; கைதி மாறி நடத்துனாங்க: குமறும் வைகோ

உணவு கூட கொடுக்கவிடல; கைதி மாறி நடத்துனாங்க: குமறும் வைகோ

மலேசியாவில் உணவு கூட கொடுக்க அனுமதிக்காமல், கைதி போல் நடத்தப்பட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். ஆனால் மலேசியாவில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டிற்கு ஆபத்தானவர்களின் பெயர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி, நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டன. பின்னர் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை திரும்பிய வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார். மலேசியாவில் தன்னை ஒரு கைதி போல் நடத்தியதாகவும், உணவு கூட கொடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

இதன் பின்னணியில் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி சர்வதேச அளவில் பேச விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply