ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து வைகோ கூறிய அதிர்ச்சி தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒவ்வொரு அதிமுக தொண்டனின் மனதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சைகள் என்ன? அவருக்கு ஏற்பட்ட நோய் என்ன? 73 நாட்களாக சிகிச்சையில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை அவரது மரணத்திற்கு பின்பும் வெளியிடாமல் மறைப்பது ஏன் என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். நேற்று நடிகை கவுதமி கூட இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தவிஷயத்தை பெரிய கட்சிகள் விஷம பிரச்சாரமாக செய்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ கூறியதாவது: மருத்துவமனையில் முறைப்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மருத்துமனை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் பல்வேறு பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து வதந்திகளை பரப்பி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வதந்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் பெரிய கட்சிகள் ஊர்ஊராக சென்று விஷமபிரச்சாரம் செய்து வருகின்றனர்’ என்று கூறியுள்ளார்.
வைகோவின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள பலர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் வைகோவுக்கும் பங்கு உண்டா? என்று கேள்வி கேட்டுள்ளனர்.