இலங்கை தலைநகர் கொழும்புவில் விஜய் டிவி சார்பில் நடத்த இருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி தமிழக அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்று கொழும்புவில் புனித வளனார் கல்லூரியிலும், நாளை பம்பலப்பட்டி கதிரேசன் மண்டபத்திலும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முதல் ஐந்து பாடகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக விஜய் டிவி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. தமிழர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக விஜய்டிவி கூறியுள்ளது.
விஜய்டிவியின் இந்த முடிவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விஜய் டிவி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.