நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்க உள்ள விழாவில் ராஜபக்சே கலந்துகொள்வதை ஒருபொதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், ஆட்சியின் தொடக்கமே தவறில் இருந்து ஆரம்பமாக கூடாது என்றும், ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இன்று புதுடில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாந்த் சிங்கை நேரில் சந்தித்த வைகோ, ஆட்சியின் தொடக்கமே தவறில் இருந்து ஆரம்பிக்கவேண்டாம் என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை ஒருபோது மதிமுக பொறுத்துக்கொள்ளாது என்றும் தங்களது எச்சரிக்கையை மீறி செயல்பட்டால் மதிமுக, பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலக தயங்காது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மோடியில் பதவியேற்பு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுவித்த பாரதிய ஜனதா கட்சிக்கு ராஜபக்சே இன்று நன்றி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து நேற்று இரவு இலங்கை திரும்பிய ராஜபக்சே, மோடி பதவியேற்பு விழாவில் கல்ந்துகொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைக்கக்கூடாது என முதல்வர் ஜெயலலிதா மற்றூம் திமுகதலைவர் கருணாநிதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.