வைகோவின் அநாகரீகமான பேச்சு. மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவா?

வைகோவின் அநாகரீகமான பேச்சு. மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவா?

vaikoவரும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிடும் மக்கள் நல கூட்டணிக்கு ஏற்கனவே குறைந்த சதவீதமே வாக்குகள் இருப்பதாக அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வரும் நிலையில், இருக்கும் அந்த குறைந்த சதவீத ஓட்டுக்களையும் வைகோ, தனது பொறுப்பற்ற பேச்சால் குலைத்துவிடுவார் போல் தெரிகிறது.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது திமுக தலைவர் கருணாநிதியின் சாதியை மறைமுகமாக சொல்லியதன் மூலம் வைகோ தனது உண்மையான முகம் இதுதான் என்பதை நிரூபித்துவிட்டார். அவரது பேச்சை அவரது கூட்டணியில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

பேசுவதையும் பேசிவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பது என்பது அரைகுறை அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் வழக்கமாக இருக்கலாம். ஆனால் அண்ணா காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் வைகோவுக்கு இது அழகா? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்

நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் வைகோவுக்கு பொருந்தும். மக்கள் நலக்கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்று இதுவரை நினைத்தவர்களுக்கு கூட வைகோவின் இந்த தரமற்ற பேச்சு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். வைகோவின் இந்த அநாகரீக பேச்சுக்காகவே மக்கள் நலக்கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும் என்றே பொதுமக்கள் நினைக்கின்றனர் என்பதுதன் உண்மை.

Leave a Reply