சோனி அல்லாத முதல் வயோ ஸ்மார்ட்போன் வெளியானது

16-1426501375-vaio

2014 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் கணினி வியாபாரத்தை நிறுத்திவிட்டு வயோ பிரிவினை மட்டும் ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக வயோ நிறுவனம் மொபைல் சந்தையில் நுழைய இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வயோ நிறுவனம் முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

சோனி இல்லாமல் வயோ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வயோ போன் என்று அழைக்கப்படுகின்றது, இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஜப்பானில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ.26,400 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே 720*1280 பிக்சல், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் கொண்டுள்ளது.

இதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகின்றது. 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் சிங்கிள் சிம் கொண்டிருப்பதோடு வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் ஜப்பானை தவிற மற்ற நாடுகளில் வெளியாவது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply