வைத்தியநாத சுவாமி கோவில் யாகசாலை பூஜை துவங்கிய போது அதிசயம் ! நடந்தது என்ன ?

 

[carousel ids=”52401,52400,52398,52399″]

திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜை நேற்று துவங்கியது. இக்கோவிலில் வரும் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவ ங்கியது. தொடர்ந்து கோமாதா பூஜை செய்யப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம் நடந்தது. மயிலாடுதுறை சிவபுரம்  வேதசிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், ஸ்தல சிவாச்சாரியார்கள் தண்டபாணி குருக்கள், திருஞானசம்பந்த குருக்கள்  தலைமையில் பூஜை நடந்தது. யாகசாலை பூஜையில் கோவில் செயல்அலுவலர், ஆய்வாளர், திருப்பணிக்குழுவினர் மற்றும் கும்பாபிஷேக  விழாக்குழுவினர் பங்கேற்றனர். யாக சாலையில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு தலா 9 யாக குண்டங்களும், பரிவார தெய்வங்களுக்கு 20 யாக  குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 60 சிவாச்சாரியார்கள் பூஜை செய்ய உள்ளனர்.

இந்த யாகசாலையின்போது, யாகத்தில் அக்கினி வளர்த்தபோது, அந்த அக்கினியில் அம்மனின் முகம் தெரிந்ததாக கூறப்பட்டது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் யாக அக்னியில் அம்மன் உருவம் தெரிந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply