வளர்ச்சிக்கு உதவுமா அம்ருத் நகரங்கள்?

smartcity_2453403g

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைத் தொடர்ந்து அம்ருத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் 500 நகரங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரை இந்தத் திட்டத்துக்கு வைத்துள்ளார்கள். சுருக்கமாக அம்ருத் (AMRUT) என அழைக்கப்படும் இந்த நகர மேம்பாட்டுத் திட்டத்தை (Atal Mission for Rejuvenation and Urban Transformation) 25.06.2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை அறிவித்தது. திட்டத்தின் மதிப்பு ரூ. 50,000 கோடி.

சமீபத்தில் அம்ருத் திட்டம் அமலாக்கப்பட்டால், நகர்ப்புறங்களில் மின் ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்த கணினிமயமாக்கல் போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். நகர்ப்புறங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி வசதியும், செயல்பாடுகளும் மேம்படுத்தப்படும். நகரப் பகுதிகளின் கட்டிடங்கள் சட்ட விதிக்குட்பட்டவையா என மதிப்பிடப்படும்.

நகராட்சி வரிகள் மதிப்பிடப்பட்டு முறையான வசூல் மேம்படுத்தப்படும். குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை முறையாகக் கண்காணிக்கப்படும். குடிமக்களுக்குப் பயன்படும் வகையில் நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்படும் வகையிலான திட்டமிடல் நடைபெறும்.

மொத்தத்தில் நகராளுமையின் தரம் உயர்த்தப்பட உள்ளதால் மக்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையிலான நகரங்களாக இந்த 500 நகரங்களும் மாறும் என்றெல்லாம் அம்ருத் திட்டத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்.

இந்திய நகர்ப்புற மக்கள்தொகையில் 73 சதவீதம் பேரை உள்ளடக்கும் வகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் 500 நகரங்கள் தேர்வுசெய்யப்படுகின்றன.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரமே இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வுபெறும் என்றாலும் மலைப் பகுதிகளிலும் தீவுப் பகுதிகளிலும், சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட நகரங்களிலும், கங்கை நதியை ஒட்டிய சில நகரங்களிலும் இந்த விதி சற்றுத் தளர்த்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இங்கே மக்கள்தொகை ஒரு லட்சத்தைவிடக் குறைவாக இருந்தாலும்கூட இப்படியான நகரங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றன.

ss_2453550g

அம்ருத் திட்டத்தின் மூலம் நகரங்கள் மேம்மடுத்தப்படும்போது அதன் மூலம் அதைச் சார்ந்து பல தொழில்கள் நாடு முழுவதும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. அதுபோலவே ரியல் எஸ்டேட் தொழிலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது

அம்ருத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட 500 நகரங்கள் கண்டெடுக்கப்பட்டு அவை மேம்படுத்தப்பட உள்ளன. இந்த நகரங்களை மாநில அரசுகளுடன் கலந்து பேசி மத்திய அரசு முடிவுசெய்யும் எனத் தெரிகிறது.

அம்ருத் திட்டம் அமலாக்கப்பட்டால், நகர்ப்புறங்களில் மின் ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்த கணினிமயமாக்கல் போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். நகர்ப்புறங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி வசதியும், செயல்பாடுகளும் மேம்படுத்தப்படும். நகரப் பகுதிகளின் கட்டிடங்கள் சட்ட விதிக்குட்பட்டவையா என மதிப்பிடப்படும்.

இதுவரையிலும் 476 நகரங்களை அடையாளம் கண்டுள்ளார்கள். இந்த 476 நகரங்களில் 225 நகரங்கள் பா.ஜ.க. அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைந்துள்ளன. எஞ்சிய நகரங்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றுவருகிறது.

உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மகராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, தெலங்கானா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள பல நகரங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பெரும்பான்மையான பலனைப் பெற உள்ளன.

தமிழ்நாட்டில் 33 நகரங்கள் அம்ருத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நகர்ப்புறக் கட்டமைப்பு வசதிகள் பெறும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமும் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி அடையும்.

Leave a Reply