அஜித்தின் ‘வலிமை’ படத்தின் வதந்தி: அதிர்ச்சி தகவல்
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் 40% படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
இருப்பினும் இந்த படத்தின் வில்லன் மற்றும் நாயகி யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை
இந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் சமூக வலைதளப் பக்கத்தில் பாலிவுட் நடிகை ப்ரினிதி சோப்ரா தான் இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இது சுரேஷ் சந்திரா பெயரில் உருவான போலியான பக்கம் என தெரிகிறது.
’வலிமை’ நாயகி குறித்த இந்த அறிவிப்பு வெளியான டுவிட்டர் பக்கம் போலியானது என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சுரேஷ் சந்திரா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. அச்சு அசலாக சுரேஷ் சந்திராவின் உண்மையான டுவிட்டர் பக்கம் உருவாக்கி அதில் வலிமை குறித்த வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
https://twitter.com/SureshChardraa/status/1236713404678766593