அஜித்தின் ‘வலிமை’ படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

அஜித்தின் ‘வலிமை’ படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள ’வலிமை’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஜூன் வரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்தன

இதன்படி வலி‘வலிமை’ மை படத்தின் படப்பிடிப்பு வரும் 13ம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடர்ச்சியாக 60 நாட்கள் நடத்த இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் கிட்டத்தட்ட பாதி படத்திற்கு மேல் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

அஜித் போலீஸ் அதிகாரியாகவும் அவருடைய நண்பராக அருண் விஜய்யும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிக்கவுள்ள இந்த படத்தில் கார் சேசிங், மோட்டார் சைக்கிள் சேசிங், உள்பட பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அடங்கி இருக்கும் என்பது என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக வெளிவரும் என்றும் 2020 ஆம் ஆண்டு தீபாவளி தல தீபாவளி என்றும் கூறப்படுகிறது

முன்னதாக ‘வலிமை’ படம் டிராப் செய்யப்பட்டுவிட்டதாக ஒருசிலர் கிளப்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘வலிமை’ படக்குழு படப்பிடிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply