ஜூரங்களையும் போக்கக் கூடிய வல்லாரை கீரை

vallaraibanner_main-350x250

இன்றைய நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் வல்லாரை கீரையின் மகத்துவத்தை பார்க்கலாம்.வல்லாரை கீரை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகும். செட்டல்லா ஏசியாட்டிக்கா என்ற தாவர பெயரை கொண்டதாக வல்லாரை கீரை விளங்குகிறது. வல்லாரை கீரை மூளைக்கு பலத்தை தரக் கூடியது. மேலும் இந்த வல்லாரை கீரையின் இலை மூளையின் வடிவத்தை ஒத்திருப்பதை காணலாம். வல்லாரை கீரை மருந்தாகவும், உணவாகவும் அமைகிறது.

வல்லாரை செடி ஞாபக சக்தியை அதிகரிக்கக் கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். இதை பயன்படுத்தி அனைத்து வகை ஜூரங்களையும் போக்கக் கூடிய மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள், வல்லாரை கீரை, துளசி இலை, மிளகு பொடி, தேன்.வல்லாரை கீரையின் இலைகளை அரிந்து அவற்றை நீரில் அலசி ஒரு பிடி அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கால் பங்கு அளவுக்கு துளசி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் மிளகு பொடியை அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு நீரை விட்டு இவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். தற்போது இதை எடுத்துக் கொண்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் தேன் சேர்த்து தொடர்ந்து பருகுவதால் ஜூரத்தில் இருந்து விடுபடலாம். குறிப்பாக யானைக்கால் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஜூரம் வரும். அவர்கள் இந்த கஷாயத்தை எடுத்துக் கொண்டால் ஜூரம் வருவது தடுக்கப்படும்.

யானைக்கால் நோய்க்கு காரணமாக இருக்கக் கூடிய கிருமிகளை போக்கக் கூடியதாக இந்த வல்லாரை கஷாயம் பயன்படுகிறது. வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்னைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.வல்லாரை கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்கள் பலப்படுத்தப்படுவதால் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது.

மன அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. மேலும் வல்லாரை கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு.வல்லாரை கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும். வல்லாரை கீரையை எடுத்துக் கொண்டு அதை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

எந்த வகையான வீக்கமாக இருந்தாலும் வல்லாரை பற்று ஒரு மிகச் சிறந்த நிவாரணியாக வேலை செய்கிறது.வல்லாரையில் செபோனேட் என்று சொல்லக் கூடிய மருத்துவ வேதிப் பொருள் மிகுதியாக உள்ளது. இது காய்ச்சல் மற்றும் வலியை நீக்கக் கூடியதாக செயல்படும் தன்மை உடையவையாகும். அதே போல் நடக்க முடியாத அளவுக்கு மூட்டு வாதத்தால் அவதிப்படுபவர்கள் அந்த இடத்தில் வல்லாரையை ஒரு மேற் பற்றாக போடுவதன் மூலம் நல்ல நிவாரணத்தை  காணலாம்.

Leave a Reply