வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!

LRG_20150923105515982337

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதைச்சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. இதில், துர்க்கை அம்மனுக்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. புரட்டாசி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் செய்யப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Leave a Reply