வால்பாறையில் புனித வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்திருவிழா கொடியேற்றம்

201602010139122420_In-Valparai--St-vanattuccinnapparFlag-Hoist-tertiruvila_SECVPF

வால்பாறை,

வால்பாறை ரொட்டிக்கடையில் உள்ள புனி££ வனத்துச்சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வனத்துச்சின்னப்பர் ஆலயம்

வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் அமைந்துள்ள புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம் புகழ்பெற்ற தேவாலயங்களுள் ஒன்று. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 9.30 மணிக்கு சுல்தான்பேட்டை மறைமாவட்ட பாலக்காடு பங்கு குரு பிரின்ஸ்ராபர்ட் தலைமையில் கூட்டுபாடல் திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப்பின் திருவிழாக்கொடியை பவனியாக எடுத்து வந்து ஏற்றி வைக்கப்பட்டது.

தேர்பவனி

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, நவநாள் வழிபாடு நடக்கிறது. வருகிற 6–ந் தேதி மாலை 5.30 மணிக்கு கோவை மறைமாவட்ட பொருளாளர் தந்தை லாரன்ஸ் தலைமையில் கூட்டு பாடல்திருப்பலியும், தொடர்ந்து தேர்பவனியும் நடக்கிறது.

7–ந் தேதி காலை 10 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி அருட்தந்தை ஆண்டனி வினோத் தலைமையில் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்பின்விருந்தும் அதன் தொடர்ச்சியாக மாலை 5.30 மணிக்கு நன்றிதிருப்பலியும், நன்றிதேர்பவனியும்,நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பங்குமக்கள் செய்துவருகின்றனர்.

Leave a Reply