நீட் விலக்கு மசோதா தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு மசோதா என்றும் அவசியம் இல்லாத ஒரு மசோதா என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழ்நாட்டின் பாடத் திட்டம் மாற்றப்பட்டு நீட் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாநிலமாக மாறி வருகிறது என்றும், அரசியல் காரணங்களுக்காக அவசியம் இல்லாத ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர் என்றும் அதனால்தான் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.