வண்டலூர் பேருந்து நிலைய திட்டம் ரத்து. கூடுவாஞ்சேரியில் புதிய பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி அதிகமாக இருப்பதால் புதிய புறநகர் பேருந்து நிலையம் ஒன்றை வண்டலூரில் அமைக்க கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வண்டலூரில் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் இங்கு அமைக்கவிருந்த பேருந்து நிலைய திட்டம் கைவிடப்படுவதாகவும் இதற்கு பதிலாக புதிய பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நேற்று சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய பேருந்து நிலையத்துக்காக, கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
.