வரகு புளியோதரை

வரகு புளியோதரை

varaguசிறுதானியங்களில் வரகு மிகவும் சத்து நிறைந்தது. வரகு அரிசியில் புளியோதரை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

வரகு புளியோதரை
தேவையான பொருட்கள் :

வரகரிசி – ஒரு கப்,
மல்லி (தனியா), எள் – தலா ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 10,
புளி – பெரிய எலுமிச்சை அளவு,
வேர்க்கடலை – 5 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – தாளிக்கத் தேவையான அளவு,
பொடித்த வெல்லம் – சிறிதளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – கால் கப்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

* வரகரிசியை 10 நிமிடம் ஊறவைத்து, களைந்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

* புளியை ஊறவைக்கவும்.

* வெறும் வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, புளியைக் கரைத்து ஊற்றி… மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்.

* பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும்போது இறக்கினால்… புளிக்காய்ச்சல் தயார்.
* தேவையான அளவு புளிக்காய்ச்சலை சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

* வரகு புளியோதரை ரெடி.

Leave a Reply