மீண்டும் பெண் வில்லியுடன் மோதும் தனுஷ்
தனுஷ், அமலாபால் நடித்த ‘விஐபி 2’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திலும் ஒரு நடிகை வில்லி ரோலில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கவுள்ள ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் கொடூரமான வில்லி கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், தனுஷூக்கு இணையாக கேரக்டர் என்பதால் இந்த படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படம் வரும் ஜுன் அல்லது ஜூலை மாதம்வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.