இப்போதைக்கு திருமணம் இல்லை. வரலட்சுமியின் காட்டமான பதில்
நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வரலட்சுமி தன்னுடைய சிறுவயது தோழி என்று கூறிய பின்னர் தன்னுடைய திருமணம் 2018ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் நடைபெறும் என்று கூறினார். இந்த பேட்டியில் இருந்து விஷால், வரலட்சுமியைத்தான் திருமணம் செய்யவுள்ளதாக புரிந்து கொண்ட சில ஊடகங்கள் பலவித கற்பனை கலந்த செய்திகளை கடந்த சில நாட்களாக வெளியிட்டு வந்தன. இந்நிலையில் தனது திருமணம் குறித்த வதந்திகளுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வரலட்சுமி தனது டுவிட்டரில், ‘ எனது திருமணம் இப்போதைக்கு இல்லை. நான் என்னுடைய வேலையைத்தான் இப்போதைக்கு திருமணம் செய்துள்ளேன். தயவு செய்து எனது திருமணம் குறித்து பொய்யான செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள். இது பத்திரிகை தர்மம் அல்ல’ என்று கூறியுள்ளார்.
‘தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து தற்போது வரலட்சுமி, அர்ஜூன், பிரசாந்த் நடிக்கும் ‘நிபுணன்’ படத்திலும், வினய் நடிக்கும் ‘அம்மாயி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் நிபுணன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.