கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியிடங்கள் விவரம்:
1. சயின்டிபிக் அசிஸ்டென்ட் (கம்ப்யூட்டர் சயின்ஸ்):
2 இடங்கள் (பொது – 1, ஒபிசி – 1)
தகுதி:
கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் பட்டப் படிப்புடன் 2 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது கம்ப்யூட்டர்சயின்ஸ் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோவுடன் 2 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது கம்ப்யூட்டர்சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. பட்டம்.
2. சயின்டிபிக் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்):
4 இடங்கள் (பொது – 2, ஒபிசி – 1, எஸ்டி – 1).
தகுதி:
எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோவுடன் 2 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. பட்டம்.
மேற்கண்ட 2 பணிகளுக்கும் சம்பளம்:
ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது:
9.10.2015 அன்று 30க்குள். ஒபிசியிருக்கு 3 ஆண்டுகளும், எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. பெண்கள், எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஸ்டேட் வங்கியில் நெட்பேங்கிங் மூலமோ ‘சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் ஃபீ’ ஸ்டாம்ப் மூலமோ கட்டணத்தை செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பத்தை http://ssckkr.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Director (KKR),
Staff Selection Commission, 1st Floor,
‘E’ Wing, Kendriya Sadan,
Koramangala,
BANGALORE- 560 034.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 9.10.2014.