வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் அபிஷேகம்!

1341867126791

புதுச்சேரி: இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில், செடல் உற்சவத்தையொட்டி மிளகாய் அபிஷேகம் நேற்று நடந்தது. கோவில்  செடல் திருவிழா கடந்த 26 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மிளகாய் அபிஷேகம் நேற்று நடந்தது. காலையில்  விநாய கர், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில், மூன்று பக்தர்களை வர்ணமுத்துமாரியம்மன், அங்காளம்மன், காளிய ம்மனாக பாவித்து சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், மிளகாய் அபிஷேகம் செய்யப்பட்டது. மிளகாய் சாந்து பருகவும் அளிக்கப்பட்டது.   பக்தர்கள் செடல் போட்டும், அலகு குத்தி வாகனங்களை இழுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆரோவில்லில் தங்கியுள்ள தென் கொரியாவைச்  சேர்ந்தவர்கள், பிரேசில் நாட்டு இசையான ‘பட்டுகடா’ இசையை, மிளகாய் அபிஷேக விழாவில் வாசித்து, அனைவரையும் கவர்ந்தனர்.

Leave a Reply